முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2022) தலைமைச் செயலகத்தில்,தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “கனவு இல்லத் திட்டத்தின்” கீழ்,ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில்,குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். அதன்படி,தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய விருதுகளை பெற்ற […]
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதற்காக,அரசு சார்பில் சென்னையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை,அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து,பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.வயது மூப்பு காரணமாக ஆரூர் தாஸ்(வயது 90) அவர்கள் தலைமை […]