சென்னை: சூப்பர் ஸ்டார்ப்பி ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது 74 வயதில் 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில், 170 படங்களை கடந்து புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ‘தளபதி’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுப்படம் ரிலீஸ் போல ‘தளபதி’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். பல திரையரங்குகளில் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது, இவரது பிறந்தநாளுக்கு […]