ஏற்கனவே உலகெங்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல ஆயிரக்கணக்காக உயிர்கள் மடிந்து வரும் நிலையில், அண்மையில் ரஷ்யாவில் உள்ள குறில் தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டது. அங்கு நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவாக பதிவாகியது. ஆனால், அது குறித்த சரியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இதன் தாக்கமாக அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஹவாய் தீவில் கிலாயு எரிமலை அண்மையில் வெடித்து சிதறியதை தொடர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை தாண்டி புகை பரவியுள்ளது. எரிமலை வெடிப்பால் இதுவரை 26 வீடுகளில் நாசமாகின. பல மைல் தூரத்திற்கு லாவா பரவியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரும்சாம்பல் புகை விண்ணை மூடியுள்ளதால் வான்வழி போக்குவரத்தை பாதிக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ரசாயன வாயுக்கள் வெளியேரலாம் என்றும் எச்சரிக்கை […]