இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தார்.சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது.மேலும் கொல்கத்தாவில் உள்ள அலிபோர் நீதிமன்றத்தில் சமியின் மனைவி ஹசின் ஜகான் சமி மற்றும் […]