ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் காவல்துறையினர், தனித்தனியான நடத்திய சோதனையில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 32,710 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஹரியானாவின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) இன்று வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 331 கிலோ 300 கிராம் எடையுள்ள 62 பாக்கெட் கஞ்சாவை சிறப்பு பணிக்குழு பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை சத்தீஸ்கரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வால் மாவட்டத்திற்கு டிராக்டர் மூலம் கடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 மாதத்தில் 11,568 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து 1,800 -க்கும் மேற்பட்டடோர் கைது செய்தததாக ஹரியானா போலீசார் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 11,568 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததன் மூலம் ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி நாயகம் மனோஜ் யாதவா கூறுகையில், இந்த ஆண்டு, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் […]