ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 49.13 % சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவரும், ஹரியானாவின் தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி, […]
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு , காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வழக்கம் போல இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில், 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே […]
டெல்லி : சர்வதேச ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் மலியுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானவை சேர்ந்த வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா (Julana) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்குகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் […]
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்பாளராக களமிறங்க உள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் தங்கள் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளனர். வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸில் இணைந்தது குறித்தும், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் களமிறங்கியது […]
டெல்லி : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்னும் ஹரியானா மாநில தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தனர். இதனால், ஹரியானா […]
டெல்லி : ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு கடந்த 2014 மற்றும் 2019 என கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்த பாஜகவும், வெற்றிக்கு அருகாமை வரை வந்து ஆட்சியை கைப்பற்ற தவறிய காங்கிரசும் இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் […]
டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது இன்று அறிவிப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் , ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை மட்டும் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் : […]