உலக அளவில் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம். இங்கு ஆண்டுதோறும் இந்திய கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. 15வது ஆண்டாக நடைபெற இருக்கும் கருத்தரங்கம் பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடக்கிறது. இதில் பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான சுரேஷ் பிரபு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் ஆகியவை பற்றி இந்நிகழ்வில் பேசப்படும். மேலும், […]
ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இதுதான் அதிகப்படியானத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க அரசாங்கத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாலச்சந்திரன். இந்தியாவின் தகவல் தொடர்புத்துறையை அதிரவைத்த இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ஊழலைப் பணியிலிருக்கும் போதே உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய முக்கிய அதிகாரி பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தற்போது தனது ஓய்வு ஊதியத் […]