இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைகள் இருந்தபோதிலும் 123 நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் மக்கள் கடைபிடித்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்பொழுது கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே உலகின் பல நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியில் காலாவதி தேதி குறிப்பிட படாததால் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் எனவும் சத்தீஸ்கர் அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காகவும் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காகவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் முதல்கட்டமாக […]
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் (High-level Group of Ministers on Covid-19) 22-வது கூட்டம் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர், இந்தியாவில் கொரோனா தொற்றின் வளர்ச்சி 2 சதவீதத்துக்கு குறைந்துள்ளதாகவும், உலகத்திலேயே மிகவும் குறைவாக உயிரிழப்பு விகிதம் 1.45% இருப்பதாக […]
நாடு முழுவதும் 29,185 மருத்துவப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் புதிதாக பல இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்ததை தொடர்ந்து புதிய மருத்துவ கல்லூரிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தற்பொழுது மருத்துவத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களையும் இந்தியா கண்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், நாடு முழுவதிலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 29 […]
கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவரும் நிலையில், அதனை தடுக்க தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான போர், முடிவுக்கு வரும் காலம் அருகில் கூட இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]