மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் . வேளாண் மசோதா விவாதத்தின் போது தன்னை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்டதால் இந்த சம்பவம் காரணமாக 2 நாள் மன உளைச்சல் அடைந்ததாக அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு எழுதிய கடிதத்தில் ஹரிவன்ஷ் தெரிவித்து, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி சிலை முன்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரித்தார் வெங்கையா நாயுடு. மாநிலங்களவை விதிகளின் படி ஹரிவன்ஷ்க்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக […]
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை துணை தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 […]