இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்ஹரிணி அமரசூரியவுக்கு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய, நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், […]