பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் 9 பேர் மீது சிபிஐ குற்றஞ்சாட்டியது, அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளனர். இந்த பாலியல் வழக்கு மீதான விசாரணை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதங்கள் மற்றும் அரசு தரப்பு […]