ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 106 நாள்கள் சிறைவாசத்திற்கு பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியேறிய உடனேயே, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் புதன்கிழமை கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ” உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் நான் மகிழ்ச்சியடைகிறேன், […]