தை மாதத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் அற்புதமான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். தைப்பொங்கலின் சூரிய பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் சிறப்புகள் மற்றும் பொங்கல் வைக்கும் நேரம் பற்றி இப்ப பதிவில் தெரிந்து கொள்வோம்.. பொங்கல் சிறப்பு : தைத்திருநாளை அறுவடை தினமாகவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க கூடிய ஒரு திருநாளாகவும் உழவர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் ஒரு உன்னதமான நாளாகும். பொங்கல் வைக்கும் நேரம் : இந்த வருடம் தை மாதம் அதிகாலை […]
நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018
காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு தென் சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி சென்னையில் விமானங்கள் ரத்தானது .அதேபோல் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளனார்கள் […]
திண்டுக்கல் : பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. கட்டுபாடுகளை விதித்து வரும் 16 ம்தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் வீனய் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோக்கிக்கப்படும் எனவும்,இந்த பொங்கல் பொருள்களில் 250 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.