“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். இந்த, முறையும் அதற்கேற்றாற்போல, மாநில அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வசித்து கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். முதலில், தான் தேசிய கீதம் […]