மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய போட்டியில் இந்தியாவின் சந்தீப் சவுதாரி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்தாவில் கடந்த 6 ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் அதில் திங்களன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சந்தீப் சவுதாரி தங்கம் வென்றுள்ளார். இந்திய வீரர் சந்நீப் மூன்றாவது முயற்சியில் 60 புள்ளி பூஜ்ஜியம் 1 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்து,நாட்டிற்கு தங்கப்பதக்கத்தை வென்றார். இந்நிலையில் இலங்கை வீரர் […]