சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரையாண்டு தேர்வானது கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வானது நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சமூக வலைதளங்களில், சில […]
சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளிலும் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணாமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? […]
கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் […]
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில். புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரம்பத்தூர் […]
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தனியார் பள்ளிகள் தேர்வு ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கல்லூரிகள் மட்டும் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 8 மாத காலங்களாக, பள்ளியில் திறக்கப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் […]