இஸ்லாமிய மத சட்ட விதிமுறைப்படி மாமிச உணவுகளாக கொல்லப்படும் கால்நடைகளுக்கு , உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படும். இதனை ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் வழங்குகின்றன. இதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இந்த ஹலால் சான்றிதழ் உத்திர பிரதேசசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட்டது போல மகாராஷ்டிராவிலும் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட வேண்டும் என மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஹலால் சான்றிதழுக்காக சேகரிக்கப்பட்ட […]