பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.