பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி உயிர் பலி எண்ணிக்கை 70தாக உயர்ந்துள்ளதாக தெறிவித்துள்ளன இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் புயலின் பாதிப்பில் […]