இந்தியாவின் சைபர்-செக்யூரிட்டி ஏஜென்சி, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி)-இன் ஆப்பிள் வாட்சில் ஓஎஸ்ஸில் ஹேக்கிங் பாதிப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஹேக் செய்யப்பட்டால் ஹேக்கர்கள் ஆப்பிள் வாட்ச் பயனரின் தனிப்பட்ட தகவலை அணுக முடியும். அதிகமான பயனர்கள் தங்கள் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தரவுகளைத் தொடர்புகொள்வதற்கு ஆப்பிள் வாட்ச்களைப் பயன்படுத்துவதால், ஹேக்கிங் பேரழிவை ஏற்படுத்தும். CERT குறிப்பின்படி, பல்வேறு குறைபாடுகள் காரணமாக பழைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் பாதிப்புகள் […]
பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசியல் கட்சிகள்,முதல்வர் அலுவலகம் உள்ளிட்டவைகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குள் ஹேக் செய்யப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,இந்திய வானிலை ஆய்வு மையம்,உ.பி முதல்வர் அலுவலகம்,பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகள் ஏற்கனவே ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு,பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில்,பஞ்சாப் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Punjab Congress’ official Twitter handle […]
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் […]
மத்திய அரசின் பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் இ-மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா,பிக் பாஸ்கெட்,டொமினோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தளங்களிலிருந்து,பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில்,மத்திய அரசின் பாதுகாப்பு துறை […]
ஆன்லைனில் டோமினோஸ் பீட்சா ஆர்டர் செய்த 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் ரூ.4 கோடிக்கு விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பீட்சா நிறுவனமான ‘டோமினோஸ் பீட்சா’ இந்தியாவில் இணைய தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது.அதாவது,இந்தியாவில் ஆன்லைனில் டோமினோஸ் பீட்சா வாங்கிய கிட்டத்தட்ட 10 லட்சம் பேரின் கிரெடிட் கார்டு தகவல்கள் ரூ.4 கோடிக்கு மேல் டார்க் வெப்பில் விற்க தயார் நிலையில் உள்ளது,என்று இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் […]
டெல்லியை சேர்ந்த ஐடி பட்டதாரி ஒருவர், ஊரடங்கு காலத்தில் வேலை இழந்ததால், தான் வேலைபார்த்த கம்பெனியின் சர்வரையே ஹேக்கிங் செய்து கம்பெனிக்கு சுமார் 3 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த ஐடி பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். டெல்லி, பழைய மயூஜ்பூர் பகுதியில் வசித்து வரும் விகேஷ் ஷர்மா எனும் ஐடி பட்டதாரி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊதிய விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஊரடங்கு சமயத்தில் அவரை நிறுவனம் […]
ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள பயனர் விவரங்களை பல ஆண்டுகளாக கசியவிட்ட பிழையை விரைவில் சரி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் சுமார் 50 கோடி ஐபோன் பயனாளர்களை பாதித்த பிழை ஒன்றை சரி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிழையை சான்ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த மொபைல் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபோன் மட்டுமின்றி ஐபேட்களிலும் இந்த பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள […]
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன. வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கீழே உள்ள விபரங்களை பின்பற்றவும். பொதுமக்கள் ஆகிய நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அப்ளிகேஷன் மூலமாகவும், இணையதளத்தில் பொருட்கள் வாங்கும் போதும், தங்களுடைய அனைத்து விபரங்களையும் ஹேக்க செய்யப்பட்டு வருகிறது. அதனால நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் […]
சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர். இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் […]
கால மாற்றம் ஏற்பட ஏற்பட பலவித சட்ட திருத்தங்களும் மாற்றம் பெற்று வந்துள்ளது. மக்களின் வாழ்விற்கு ஏற்பவும், அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பவும் எண்ணற்ற சட்டங்களும், அவ்வப்போது அதற்கான திருத்தங்களும் கொண்டு வரப்படுகிறது. இது மக்களின் வசதிக்கும் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இன்றைய கால கட்டத்தில் பலவித தீய செயல்கள் நடந்து வருகின்றன. அதுவும் நவீன முறையில் இவற்றை செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் நமது அந்தரங்க தகவல்கள் முதல் அடிப்படை தகவல்களை வரை திருடப்படுகிறது. ஏதோ ஒரு […]
ரகசியம் என்பது நம் எல்லோருக்குமே ரொம்ப பிடித்தமானது. எதையும் ரகசியமாகவே செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் மிக சிலரை நம் வாழ்வில் பார்த்திருப்போம். சில வகையான ரகசியங்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்து விடும். இந்த வகையை சேர்ந்தது தான் ரகசிய ஆப்ஸ்களும். இது வரையில் நீங்கள் பெரும்பாலும் அறிந்திராத 5 ரகசிய ஆப்ஸ்களை தான் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள போகிறோம். இனி, இரகசிய கெட்ஜெட்ஸ் உலகத்துக்குள் நுழைய தயாராகுங்கள்! க்ளாக் ஆப் (Clock App) நம்மில் […]
எல்லா காலக்கட்டத்திலும் நல்லது ஒன்று இருந்தால் கெட்டது என்பதும் கூடவே இருக்கும். நல்ல விஷயங்களை மனித மூளையால் அவ்வளவு விரைவில் பழகி கொள்ள இயலாது. ஆனால், கெட்ட விஷயங்களை மிக எளிதாக நமது மூளை சேமித்து வைத்து கொள்ளும். இதை சார்ந்த நுண்ணறிவியலை தான் நமது தொழிற்நுட்பங்களிலும் நாம் புகுத்தி வருகின்றோம். மனிதன் உருவாக்கிய தொழிற்நுட்பங்கள் பலவும் இந்த வகையை சேர்ந்ததாகவே உள்ளன. இதில் நமது மொபைலில் அதிக அளவில் உள்ள ஆஃப்ஸ்கள் அடங்கும். இன்றைய கால […]