இந்தியாவில் 81.5 கோடி ஆதார் அட்டை பயனர்களின் தரவு டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டார்க் வெப் மூலம் இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரீசெக்யூரிட்டியின் அறிக்கையின்படி, 815 மில்லியன் இந்தியர்களின் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் டார்க் வெப்பில் ( $80,000) விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, டார்க் வெப்பில் பெயர்கள், தொலைபேசி […]
இந்தியாவின் சைபர்-செக்யூரிட்டி ஏஜென்சி, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி)-இன் ஆப்பிள் வாட்சில் ஓஎஸ்ஸில் ஹேக்கிங் பாதிப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஹேக் செய்யப்பட்டால் ஹேக்கர்கள் ஆப்பிள் வாட்ச் பயனரின் தனிப்பட்ட தகவலை அணுக முடியும். அதிகமான பயனர்கள் தங்கள் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தரவுகளைத் தொடர்புகொள்வதற்கு ஆப்பிள் வாட்ச்களைப் பயன்படுத்துவதால், ஹேக்கிங் பேரழிவை ஏற்படுத்தும். CERT குறிப்பின்படி, பல்வேறு குறைபாடுகள் காரணமாக பழைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் பாதிப்புகள் […]
ஒரு பில்லியன் சீன குடிமக்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் ஷாங்காய் காவல்துறையிடமிருந்து பெற்றதாக ஹேக்கர் ஒருவர் கூறியுள்ளார்.இது உண்மை என்றால் வரலாற்றில் மிகப்பெரிய தகவல் திருட்டில் ஒன்றாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2022 இல், ஷாங்காய் தேசிய காவல்துறையின் (SHGA) டேட்டாபேஸ் கசிந்தது.இதில் பல டெராபைட் (TB) தரவுகள் மற்றும் பில்லியன் கணக்கான சீன குடிமக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த தரவுகளில் 1 பில்லியன் சீன தேசிய குடிமக்கள் […]
பிரபல கிரிப்டோகரன்சி தளமான க்யூபிட் (Qubit) தளத்திடமிருந்து 80 மில்லியன் டாலரை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். ஒரு பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) தளமான க்யூபிட் ஃபைனான்ஸ் (Qubit Finance) கிரிப்டோகரன்சி தளத்திலிருந்து 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடிவிட்டனர். மேலும், அந்நிறுவனம் இப்போது திருடப்பட்ட கிரிப்டோகரன்சியைத் திருப்பித் தருமாறு ஹேக்கர்களிடம் கெஞ்சுகிறது. 2022 ஆம் ஆண்டில் திருடப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோகரன்சி ஹேக் இதுவாகும். க்யூபிட் ஃபைனான்ஸ் ஹேக் செய்ததை ஒப்புக் கொண்டது. Qubit Finance குழு நேரடியாக […]
1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது.இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து,இந்த முடக்கம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார்.அதன்பின்னர்,6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு […]
அகமதாபாத்:வோடபோன் ஐடியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் பயன்படுத்தி வங்கிகளிலிருந்து ரூ.94.57 லட்சத்தை எடுத்த ஹேக்கர் அகமதாபாத்தில் கைது. அகமதாபாத்தில் உள்ள வோடபோன் ஐடியா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்து ரூ .94.57 லட்சம் மோசடி செய்ததாக பீகார் கயாவைச் சேர்ந்த 21 வயது குல்ஷன் சிங் இளைஞரை அகமதாபாத் சைபர் கிரைம் செல் புதன்கிழமை கைது செய்ததுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் சமீபத்தில் வோடபோன் ஐடியாவிடம் இருந்து எங்களுக்கு புகார் […]
பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் $100-$1,500 (இந்திய மதிப்பின்படி ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம்) வரை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்துள்ளது, பலரை அதிர்ச்சிக்குளாகியது. உலகளவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் CEO, CFO மற்றும் CMO உள்ளிட்டோரின் மைக்ரோஃசாப்ட் இ மெயில் ஐடியை பாஸ்வேர்டுடன் டார்க் வெப்பில்ஹேக்கர் ஒருவர் ரூ.7,400 முதல் ரூ.1.1 லட்சம் வரை விற்பனை செய்து வருகிறார். இதுதொடர்பாக ZDNet […]
கால மாற்றம் ஏற்பட ஏற்பட பலவித சட்ட திருத்தங்களும் மாற்றம் பெற்று வந்துள்ளது. மக்களின் வாழ்விற்கு ஏற்பவும், அவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்பவும் எண்ணற்ற சட்டங்களும், அவ்வப்போது அதற்கான திருத்தங்களும் கொண்டு வரப்படுகிறது. இது மக்களின் வசதிக்கும் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப மாறுபடும். இன்றைய கால கட்டத்தில் பலவித தீய செயல்கள் நடந்து வருகின்றன. அதுவும் நவீன முறையில் இவற்றை செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் நமது அந்தரங்க தகவல்கள் முதல் அடிப்படை தகவல்களை வரை திருடப்படுகிறது. ஏதோ ஒரு […]