பிரதமர் மோடி, நாளை மாலை உரையாற்றவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் i4c இணைந்து நடத்தும் ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் இறுதி போட்டி, நாளை நடைபெறுகிறது. இதன்காரணமாக, பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியளவில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.