மருத்துவ முகாமில் ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 6 மாணவர்கள் H1N1 எனப்படும் இன்ஃபுளூயன்சா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரவும் பன்றிக்காய்ச்சலால் பள்ளி மாணவர்கள் அவதி.. கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கேரள சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்ட அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள விஎம்ஹெச்எம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 206 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல் தாக்கியதாக முதலில் புகார் வந்துள்ளது. […]