H1 N1 வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 9 குழந்தைகள் H1 N1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் தான் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம். […]