தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரல். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி பணிகளுக்கு இடையிலும், அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் காலை, மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சைக்கிள் ஓட்டுவதிலும் ஆர்வம் கொண்ட முதலமைச்சர், இந்த பயணத்தின்போது மக்களையும் சந்தித்து அவர்களையும் உற்சாகப்படுத்துகிறார். சைக்கிள் பயிற்சி மட்டுமின்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் இயந்திரங்களின் உதவியுடன் உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். […]