சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஷாலினி பாண்டே, நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘100% காதல்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களே இசையமைத்து வருகின்றார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுற்று வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.