குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார் என்று தெரிவித்தார்.மேலும் ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ்சின் தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன் என்று கூறினார். இவரது இந்த கருத்திற்கு அதிமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் கூறுகையில், துணை முதல்வர் ஓபிஎஸ் […]