ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் குருத்வாராவில் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. குருத்வாரா வாயிலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குருத்வாராவின் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் […]
குருத்துவாரை மசூதியாக மாற்ற முடிவு செய்துள்ள நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாகிதி அஸ்தானா என்ற பிரசித்தி பெற்ற குருத்துவார் பாகித்தானில் உள்ள லாகூரில் உள்ளது.இந்த கோயில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இதற்கு அருகில் மசூதி ஒன்றும் உள்ளது.இதனிடையே குருத்துவார் மசூதிக்கு சொந்தமானது என்றும் அதனை மசூதியாக மாற்ற பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் […]