அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தனது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான். அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 13 வயது சிறுவன், வீட்டில் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்த போது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான். பணம் கொடுக்காமல் ஆயுதத்தை எடுத்துச் சென்றவர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அது அவரது சகோதரியைத் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சிறுவன் துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு தேவையான அனைத்து பாகங்களையும் ஆர்டர் செய்திருந்தான் என போலீசார் தெரிவித்தனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்த சமயத்தில் இன்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை […]