ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் “தாக்குதல் ஆயுதத்துடன்” நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடுநிலைப்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி […]
பூஞ்ச் மாவட்டத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுகொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர் கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் நடக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இருவரிடமிருந்தும் 2 ஏகே 47 ரக […]
ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
காஷ்மீரில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாத தடுப்பு உளவுத்துறை தீவிரவாதிகளை பற்றிய ரகசிய தகவலை தெரிவித்துள்ளது. இதனால் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் நேற்று இரவு ரஜோரியில் உள்ள தனமண்டி வனத்தில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் இருப்பதை உறுதி செய்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இதில் இறந்தவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் […]
திரிபுராவில் ஏற்பட்ட தீவிரவாத துப்பாக்கி தாக்குதலின் போது இரண்டு எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த தீவிரவாத படையினர் பாதுகாப்பு படை மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பாதுகாப்பு […]
பீகாரில் வங்கி முன் நின்றிருந்த பண வண்டியில் திருட்டு முயற்சி செய்த இரண்டு மர்ம நபர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பாதுகாவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பீகார் மாநிலத்தில் முஸாபார்பூரில் உள்ள சென்ட்ரல் வங்கியின் வெளியில் பணத்துடன் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தனர். அப்பொழுது வண்டியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதில் ஒருவர் கீழே இறங்கி வந்து பணம் இருக்க கூடிய வண்டியை நோக்கி வந்த அந்த நபர் பாதுகாப்பு […]
அமெரிக்கா, சிகாகோவில் ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் கூடியிருந்த மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். அமெரிக்காவில் ஒவ்வொரு வருட மே மாதத்தின் இறுதி திங்கள்கிழமை ராணுவத்தில் பணிபுரிந்து, உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் அந்த தினத்தன்று, அந்நாட்டில் விடுமுறை அளிக்கப்படும். இந்த தினத்தன்று சிகாகோ நகர் மக்கள் ராணுவ அருகாட்சியகம், நூலகத்திற்கு செல்வார்கள். மேலும் சிலர், பீச், ஏறிக்கு சென்று விடுமுறையை கழிப்பார்கள். இந்நிலையில், சிகாகோ நகரில் ராணுவ வீரர்களின் […]