எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 21 வயது இளம் ராணுவவீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார். இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த […]