பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை பரிந்துரை செய்தார் இம்ரான்கான். பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை, இம்ரான்கான் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை பரிந்துரை செய்து அதிபர் ஆரிப் அல்விக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் பணி குல்சார் அகமது தலைமையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, […]