கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இஸ்லாமியர்கள் சிலரை குஜராத் போலீசார் கட்டி வைத்து அடித்துள்ளனர். அதற்கு பதில் கேட்டு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அன்று குஜராத் மாநிலத்தில் கேடா எனும் மாவட்டத்தில் உந்தெலா கிராமத்தில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் அழைத்துவந்து ஒரு கம்பத்தில் […]