குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர் பாதிக்கப்படக்கூடிய தலித் சமூக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். இவர் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு வாக்கெட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மேவானி 84 […]
பிரதமர் மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்று காந்திநகரில் அவருடன் இரவு உணவு அருந்தினார். கொரோனா பெரும் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதர் மோடி தனது தாயை சந்தித்தார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் ஹிராபென் வசித்து வருகிறார். காந்திநகர் புறநகரில் உள்ள ரெய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். குஜராத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி தாயை […]
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ரதான்பூர் பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அல்பேஷ் தாக்கூர். காங்கிரஸ் கட்சி உடனான கருத்து மோதலால் தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அணைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி கொண்டார். கடந்த 5 ம் தேதி அல்பேஷ் தாக்கூர் மற்றும் பேயட் தொகுதி முன்னாள் […]
இறைச்சிக்காக பசு மாட்டை கொன்றதற்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்ததற்காக முஸ்லீம் ஒருவர் இந்து ஆதரவாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்ந்தவர்கள் இது […]
பொதுவாக திருமண விழா என்றால் ஆடல் பாடல் என மகிழ்ச்சியை உறவினர்கள் , சொந்த பந்தம் அனுபவிப்பது வழக்கம்.இந்நிலையில் சமீபத்தில் வடமாநிலங்களில் நடைபெற்ற திருமண விழா வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் ஆடல் , பாடல் மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடி வந்த வேளையில் உறவினர்கள் மணமக்கள் மீது பணத்தை அள்ளி எறிந்தனர்.மணமக்கள் மீது பணம் விழுந்து லட்சக்கணக்கான பணம் பறந்து கீழே விழுந்தது.பின்னனர் அதை எடுத்து பசு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் பள்ளிகளில் வருகை பதிவிட்டேன் போது உள்ளேன் ஐயாவிற்கு பதில் ஜெய் ஹிந்து , ஜெய் பாரத் கூற வேண்டுமென்ற புதிய உத்தரவிட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் வருகை பதிவேட்டில் “உள்ளேன் ஐயா” என்று கூறாமல் அதற்க்கு பதில் ஜெய்ஹிந்து , ஜெய் பாரத் என்று கூற வேண்டுமென்று […]
குஜராத் மாநிலத்தில், 2002-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்-பரிவாரங்கள் நடத்திய மதவெறியாட்டத்தை, அப்போதைய மோடி தலைமையிலான மாநில அரசு வேடிக்கை பார்த்ததாக இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற துணைத்தளபதி ஜெனரல் சமீர் உதீன் ஷா கூறியுள்ளார். அரசு மட்டும் உதவியிருந்தால் குறைந்தபட்சம் 300 பேர்களின் உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குஜராத் வன்முறையைத் தடுக்கும் பணியில் 2002-இல் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. இந்த படைக்கு தலைமை வகித்தவர்தான் ஜெனரல் சமீர் உதீன் ஷா. பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர், ‘தி […]
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., அபிலேஷ் தாகூர், குஜாரத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்த்து அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். குஜாரத்தில் ஏற்பட்ட வன்முறையில், ஒருசிலர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியிருக்கலாம். ஆனால் இதை அரசியலாக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று கூறியுள்ளார். பீகாரை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளி ஒருவர் 14 மாத குழந்தையை பலாத்காரம் செய்ததில், குஜராத் மக்களின் மொத்த கோபமும் பீகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களிலிருந்து வந்து குஜராத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் மீது […]
உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘நான் குஜராத்திற்கு முதல்வராக பொறுப்பேற்ற போது, அதை தென் கொரியாவாக மாற்ற நினைத்தேன்’ என்று பேசியுள்ளார். உத்தரகாண்ட் மாநில, டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, உரையாற்றிய போது, ‘பல நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது. பல சிறிய நாடுகளை விட நமது மாநிலங்களிடம் அதிக திறன் உள்ளது. நான் 2001, […]
கடந்த 25 ஆண்டுகளாக நிறுவனத்தில் விசுவாசமாக பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு தலா ரூ.ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து குஜராத் வைரவியாபாரி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் ஹரே கிருஷ்னா ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர் சவ்ஜி தோலாகியா. இவரை சூரத் மற்றும் சவுராஷ்டிரா பகுதியில் சிவாஜிகாகா என்று அழைக்கிறார்கள். அம்ரேலி மாவட்டத்தில், தூத்லாலா என்ற சிறிய கிராமத்தில் தோலாகியா பிறந்தார்.கடந்த 1977-ம் ஆண்டு தனது கிராமத்தில் இருந்து கையில் ரூ.12.5 […]
குஜராத் , பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. லீலாதர் வகேலா (வயது 83). இவர் குஜராத்தின் படான் தொகுதியில் இருந்து MP தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தினமும் காலை நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே செல்வார்.அதே போல சம்பவத்தன்றும் நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த பசு தாக்க முற்பட்ட்து. அப்போது சுதாரித்துக் கொண்ட அவர் தனது கைக்குட்டையால் பசுவை விரட்ட முயற்சித்தார்.ஆனாலும் பசுவின் தாக்குதல் குறையவில்லை. இறுதியாக பசு மாடு முட்டியதில் நிலைகுலைந்த MP பசு மாட்டின் முட்டால் தூக்கி […]
பூமியானது வலதுபுறத்தில் இருந்து இடது புறமாக சுத்துகிறது என்ற தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்கள் அவர்கள் உபயோகபடுத்தும் கடிகாரத்தின் முட்களை வலம் இருந்து இடமாக சுற்றும் படி வைத்து உபயோக படுத்துகின்றனர்.அந்த கடிகாரத்தின் மத்தியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. லால்சிங் காமித் இவர் அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் தான் இந்த கடிகாரங்களை உருவாக்குகிறார்.இது அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதுவரை 15000 […]
குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததை தொடர்ந்து, மாநிலத்தின் முதல்வராக விஜய் ருபானி (61) , துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 18 அமைச்சர்கள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். தலைநகர் காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகத்தில் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் குஜராத்தின் 16-வது முதல்வராக விஜய் ருபானி பதவியேற்றார். இவருடன் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட 19 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் […]