நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்கள் முடிவில் பிஜேபி வெற்றிபெற்றது.இதனை தொடர்ந்து குஜராத் பாஜகவை சேர்ந்த விஜய் ருபானி முதல்வராக இன்று பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இவர் குஜராத் மாநில முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி,பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஸா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.