குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி என்ற ஏரிக்கு சுற்றுலா செல்ல பள்ளி மாணவர்கள் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படகில் பயணம் செய்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. படகு கவிழ்ந்ததில் 2 ஆசிரியர்கள் 14 […]
குஜராத் மாநிலம் வதோதராவில், பேருந்து மற்றும் ட்ரைலர் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அகமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் ட்ரைலர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். பேருந்து, ராஜஸ்தானிலிருந்து சூரத் வரை சென்ற போது நெடுஞ்சாலை பாலம் ஒன்றில் ட்ரைலரை முந்துவதற்கு முயற்சித்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக நெடுஞ்சாலை போலீசார் தெரிவித்தனர்.