குஜராத் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. குஜராத் சட்டமன்ற தேர்தல் 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் விதிப்படி இன்று மாலையுடன் மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் முடிகிறது. இந்த முறை வழக்கத்துக்கு […]
குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களை பாஜக நிரப்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை குஜராத்தில் தேர்தல் பேரணியில் பேசுகையில், இந்த காலியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த பாஜக தேர்வு செய்வதில்லை, ஏனெனில் பாதி வேலைகள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சாதிகள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி)க்கானது. குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும் அரசு […]
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்கள் 2024 நாடாளுமனன்றே தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது.- குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து. குஜராத்தில் இன்று 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது . வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். 27 வருடமாக ஆட்சி செய்யும் பாஜக இந்த முறையும் வெற்றி பெறுமா.?அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா.? அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என இந்திய நாடே இந்த […]
குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,அனைவரும் வாக்களியுங்கள். – என குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி எம்பி டிவீட் செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதுவரையில் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியாக இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கி மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று […]
தேர்தலில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என பஞ்சாப் முதல்வர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் தேர்தலை ஒட்டி ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரச்சரம் செய்வதற்காக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். இந்த வேளையில், இன்று காலை, பாட்டியாலா புறவழிச்சாலையில் போராட்டக்காரர்கள் திரண்டு, பேரணியாக பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருக்கும் முதலமைச்சரின் வீட்டை நோக்கி செல்லஆரம்பித்தனர். போராட்டக்காரர்கள், ஆம் ஆத்மி தேர்தலின் போது […]
குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது. குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் […]
குஜராத் மாநில எல்லையினை ஒட்டியுள்ள மஹாராஷ்டிரா மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விடுமுறை. 27ஆண்டுகளாக பாஜக ஆளும் குஜராத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் என மொத்தமாக 182- தொகுதிகளுக்கும் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக […]
குஜராத்:ஹர்திக் படேல், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் “ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது” மற்றும் “சிறிய சிப்பாயாக” பணியாற்றுவது குறித்து ட்வீட் செய்திருந்த நிலையில் பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல் குஜராத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் குஜராத்தின் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 28 வயதான அவருக்கு காவி துண்டு அணிவித்து மற்றும் தொப்பியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவில் இணைவதற்கு முன்னதாக ஹர்திக் […]
குஜராத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் ஆட்டம் பரபரக்க தொடங்கியுள்ளது.இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்னதாக ஹர்திக் படேல் தனது ட்விட்டர் பதிவில், “தேசிய நலன், மாநில நலன், பொதுநலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். உன்னதமான சேவையில் சிறு சிப்பாயாக பணியாற்றுவேன். […]