தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, இன்று துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் […]
குஜராத் மாநிலம், மோர்பி பகுதியிலுள்ள கேபிள் பாலம் ஒன்று நேற்று அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தின் மீது சுமார் 500 பேர் வரை நின்று கொண்டுள்ளார்கள். இதனால், எடை தாங்காமல் பாலம் அறுந்து விழ, அதில் இருந்த பலர் கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளார்கள். இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை தொடங்கினர். இவர்களுடன் மூன்று மாநிலங்களைச் […]
குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 180 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி தெரிவித்துள்ளார். பாலம் விழுந்ததில் ஆற்றில் இன்னும் சில பேர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களைத்தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் […]