சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை கடந்த நவம்பர் 13ஆம் தேதி விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளி விக்னேஷ் கைது கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் […]
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த பிறகும் விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை என உறவினர்கள் குற்றம் சாடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் எனும் இளைஞர் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்ட நிலையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த அவசர சிகிச்சை பிரிவு […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், இதே மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி என்பவரை ஒரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் நேற்று முன்தினம் அங்கு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படியான சூழலில், நேற்று முன்தினம் இரவு கிண்டி அரசு மருத்துவமனைக்கு விக்னேஷ் (வயது 30) எனும் […]
சென்னை : கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது அரசு மருத்துவர்கள் சங்கம். அதாவது, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்குள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர் பாலாஜியை நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் […]
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கே நேரில் சென்றுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், அங்கு சென்று உதயநிதிக்கு சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதனை குறித்து […]
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது, அரசு மருத்துவருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மருத்துவர் தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை நோயாளியுடன் வந்த விக்னேஷ் என்னும் வடமாநில இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக, இரு வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக […]
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி ஆத்திரத்தில், மருத்துவரின் கழுத்து, முதுகில் சரமாரியாக கத்திக் குத்து விழுந்துள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் தான் இந்த கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக, 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக […]
சாதி மத கோட்பாடுகளை எதிர்த்த சமூக சீர்திருத்தவாதி, திராவிட கொள்கைகள் தோன்றுவதற்கு வித்திட்ட முக்கிய தலைவர் , பன்மொழி கலைஞர் என போற்றப்படும் அயோத்திதாசருக்கு முழு உருவ சிலையும், மணி மண்டபமும் அமைக்கப்படும் என முதலவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021இல் அறிவித்தார். அதன்படி, இன்று சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் 2.49 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசருக்கு முழுஉருவ சிலையுடன் , மணிமண்டபம் அமைக்கபட்டது. இந்த சிலை மற்றும் மணிமண்டபத்தை முதல்வர் […]
சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ளே நுழைந்த மர்மநபர். பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிச் செல்லும் நபரால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் மேலாடையின்றி உள்ளே நுழைந்த மர்மநபர், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில், […]
சிறுவர்களுக்காக முன்பு இருந்த ரூ.5-ல் இருந்து ரூ.15 ஆகவும், பெரியவர்களுக்கு முன்பு இருந்த ரூ.20-ல் இருந்து ரூ.50 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா இந்தியாவில் 8-வது சிறிய தேசிய பூங்கா.இந்த பூங்காவில் 350-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் , பாலூட்டி சிற்றினங்கள் , 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் […]
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது […]