தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை உடனே வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான 42 ஆம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணொளி மூலம் கலந்துகொண்டார். அதில் உரையாற்றிய அமைச்சர், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்த விவகாரத்திற்கு ஒரு […]