பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்திலிருந்து 5.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 18% […]
இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக […]
எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினருக்கு 18% GST வரியாக ரூ.54-ம், இதர பட்டியலின மாணவர்களுக்கு ரூ.27-ம் வசூலிக்கப்பட உள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் […]
தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோலியப் பொருட்களை GST வரம்பிற்குள் கொண்டு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திமுக. மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், […]
தமிழகம்:நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத GST வரியினை முழுமையாக ரத்து செய்ய, GST குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்,விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,நூலிற்கான விலையினைக் குறைப்பதற்கு,தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது […]
பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், […]
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.17,000 கோடியை விடுவித்துள்ளது.அதன்படி, தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.3053.5959 கோடியும், கர்நாடகா மாநிலத்துக்கு ரூ.1602.6152 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும்,குஜராத்துக்கு ரூ.1428.4106 கோடி,கேரளாவுக்கு ரூ.673.8487 கோடி என பிற மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது. 2021-22 ஆம் […]
அக்டோபரில் ரூ.1,30,127 கோடி மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலானதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1,30,127 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அக்டோபர் 2021 இன் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 24% மற்றும் 2019-2020 உடன் ஒப்பிடுகையில் 36% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். GST collection for October 2021 registered the second highest since […]
பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 77% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக,லோக்கல் சர்க்கிள்ஸ் வலைத்தளம் (LocalCircles)நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றுள்ளனர். கடந்த 2019க்குப் பிறகு நேரடியாக நடைபெறும் […]
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.20,522 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ.52,247 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ.26,884 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.8,646 கோடியும் ( பொருட்கள் […]
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல். டெல்லியில் இன்று காணொலி மூலம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு வரக்கூடிய வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதுச்சேரியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் […]
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,16,393 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,16,393 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.22,197 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.28,541 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ. 57,864 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 27,900 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.7,790 கோடியும் ( பொருட்கள் […]
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த […]
கடந்த 8 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்த நிலையில், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது. மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், ஜூன் 5-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரையிலான உள்நாட்டு […]
இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி மீதான 5% ஜிஎஸ்டி வரி தொடரும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது […]
இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. Tocilizumab என்ற மருந்துக்கு ஜிஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். […]
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில்,இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில்,இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]
நாளை மறுநாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டில் இருந்து விலக்கு கோரி மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். நடப்பாண்டில் நடைபெற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும். இந்நிலையில், நாளை மறுநாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கவுள்ளார்.
மே மாதத்தில் ஜிஎஸ்டி ரூ. 1,02,709 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாத ஜிஎஸ்டியை விட இந்த ஆண்டு 65% கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு 65 % கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் […]