டெல்லி : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜி.எஸ்.டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு குறைவாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு நுழைவுக் கட்டணமாக (Gateway Fee) 18 சதவீதத்தை விதிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவுகள், பரிந்துரைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, ஆயுள் மற்றும் உடல்நலம் குறித்த காப்பீடுகளுக்கு […]
பெரியவர், சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தம்பி பிடிஆர்-க்கு என்று கூறி, தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்து கொண்டு அந்த பொறுப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சதிகாரத்துடனும், பெரியவர், சிறியவர் பேதமின்றி ட்விட்டரில் அமர்ந்துகொண்டு வசைபாடுவதும் அந்த பதவிக்கு அழகல்ல. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்பது […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திலிருந்து முதல் முதலாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவுள்ளார். Smt @nsitharaman will chair the […]
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், கொரோனா அச்சத்தால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது..இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றுள்ளார்.இதில், அரசின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில் சில பொருட்கள் மீதான வரியை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.