விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ராக்கெட் இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தகவல். இன்று காலை 5:43 மணியளவில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஈ.ஓ.எஸ்.03 செயற்கை கோளானது, இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கணிதவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக்கோளானது 2,268 எடை கொண்டது. ஜி.எஸ்.எல்.வி. […]
வரும் 12-ஆம் தேதி ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 12-ஆம் தேதி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி பிஎஸ்எல்வி […]