சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் மணப்பெண்ணின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் பெறும் வழக்கம் பெரும்பான்மையாக இருக்கிறது. அதிலும் இந்து மத திருமணங்களில் இது கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர் அவரின் திருமணத்தின் போது மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். […]