டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் செலவை குறைப்பதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1,32,500 கோடி நிதி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை […]