பல கிராமி விருதுகளை வென்ற பிரபல பாடகி நவோமி ஜட் காலமானார்!
மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகியும்,ஐந்து முறை கிராமி விருது வென்றவருமான நவோமி ஜட்,தனது 76 வயதில் சனிக்கிழமை காலமானார்.இதனையடுத்து,நவோமி ஜட்டின் மரணம் தொடர்பாக அவரது மகள்கள்,வைனோனா மற்றும் ஆஷ்லே,தி அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு வழங்கிய அறிக்கையில் கூறியதாவது: “இன்று நாங்கள் ஒரு பெரும் சோகத்தை அனுபவித்தோம்.எங்கள் அழகான தாயை இழந்தோம்.இதனால் நாங்கள் உடைந்து போனோம். நாங்கள் ஆழ்ந்த துக்கத்தில் பயணிக்கிறோம்,நாங்கள் எங்கள் தாயை நேசித்ததைப் போலவே,அவர் பொதுமக்களாளும் நேசிக்கப்படுகிறார் என்பதை அறிவோம்”,என்று தெரிவித்துள்ளனர். மேலும்,அவரது கணவர் மற்றும் […]