கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை தொடர்பான வழக்கில் பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 4 வாரங்களுக்கு தினமும் 2 வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் பட்டதாரி இளைஞர் ஆகாஷ் என்பவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.