தூத்துக்குடியில் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேனர்கள் வைத்ததோடு மொய்கவரில் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி அசத்தியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல கட்டுபாட்டுகளுடன் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் நடந்த பொறியாளர்களான கௌதம் குமார் மற்றும் மனோகிரியின் திருமணம் பெரும் அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வரவேற்பைப் பெற்றுள்ளது. […]