ஷாருக்கான் – நயன்தாரா நடித்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவிக்கு அனைத்து காட்சிகளும் பிடித்துவிட்டது. அதனால், அவர் சிபாரிசு செய்ததால், மீண்டும் நயன்தாரா அட்லீ படத்திற்குள் இணைந்துவிட்டாராம். தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதுவும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]