Tag: GovtSchools

போராட்டம் தொடரும்! இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு. சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில், பசுமைவழி சாலையில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் […]

#Chennai 2 Min Read
Default Image

கடும் பனி: இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள் திறக்கும்.! மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு.!

பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த […]

CMBhagwantMann 2 Min Read
Default Image

67 மாணவர்கள், 5 ஆசிரியர்கள்! கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள். பள்ளி அளவில் கல்வி, மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]

#DMK 6 Min Read
Default Image

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.  தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் இன்று வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு செப்டம்பர் 30ல் முடிவடைந்ததை அடுத்து, அக்.1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த காலாண்டு […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்!

வரும் 30-ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடு பற்றி விவாதிக்க ஏதுவாக வரும் 30-ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் நடைபெறுகிறது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை […]

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடு கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை

முதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேலைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்து உத்தரவு!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளி – முதலமைச்சர் அறிவிப்பு!

டெல்லி அரசு மாதிரி பள்ளிபோல தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நவீன வசதிகளுடன் உள்ள அரசு பள்ளியை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். டெல்லியில் அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த […]

#CMMKStalin 4 Min Read
Default Image